search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போரூர் ரவுடி கைது"

    போரூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    போரூர்:

    எம்.ஜி.ஆர்.நகர், அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் என்கிற முன்ட குட்டி(37). பிரபல ரவுடியான சீசிங் ராஜா என்பவரின் கூட்டாளி. முன்டகுட்டி மீது கொலை, கொலை முயற்சி, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    கடந்த ஆண்டு ரவுடி சி.டி.மணியின் கூட்டாளிகளான கோபி, கார்த்திக் ஆகிய இரண்டு பேரையும் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் எம்ஜிஆர் நகர் சூளை பள்ளம் பகுதியில் பதுங்கி இருந்த முன்டகுட்டியை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    முன்டகுட்டி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எம்ஜிஆர் நகர் போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று முன்டகுட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார்.

    கிண்டி, போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 3 சவரன் செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    போரூர்:

    கிண்டி, போரூர் டிரங்க் சாலையில் ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அவன் புது பெருங்களத்தூர், பாரதி நகர், கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்கிற சுரேஷ் கண்ணன் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட குமரேசன் என்பவரின் கூட்டாளியாக இருந்ததும் தெரிந்தது.

    தற்போது அவன் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளான். இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 3 சவரன் செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சுரேஷ் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சுதா ராணி. சாப்ட்வேர் நிறுவன ஊழியர். இவர் பணிமுடிந்து தங்கி இருந்த விடுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சுதாராணி கைப்பையை பறித்து சென்றனர். அதில் விலை உயர்ந்த செல்போன், பணம் இருந்தது.

    இது தொடர்பாக 17 வயதுடைய 2 சிறுவர்கள் மற்றும் துரைப்பாக்கம், ராஜீவ் நகரை சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.

    ×